பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் தலைமையில் காரைதீவு பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதன் போது உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மீன்வாடிகள், பழ விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் போன்றன பரிசோதனை மேற்கொள்ளபட்டு சுகாதார ஆலோசனை வழங்கபட்டத்துடன் உணவு சுகாதாரத்தை மீறிய நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது.
இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்திடீர் சோதனை நடவடிக்கையில் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், உணவு மருந்துகள் பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
காரைதீவில் திடீர் சோதனை- சிக்கலில் மாட்டிய உணவகங்கள் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் தலைமையில் காரைதீவு பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இதன் போது உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மீன்வாடிகள், பழ விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் போன்றன பரிசோதனை மேற்கொள்ளபட்டு சுகாதார ஆலோசனை வழங்கபட்டத்துடன் உணவு சுகாதாரத்தை மீறிய நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது.இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இத்திடீர் சோதனை நடவடிக்கையில் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், உணவு மருந்துகள் பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.