• Nov 18 2024

மஸ்கெலியாவில் வாகனத் திருட்டுச் சம்பவத்துதுடன் தொடர்புடைய - சந்தேக நபர் ஓருவர் கைது

Tharmini / Nov 18th 2024, 9:59 am
image

கடந்த வாரம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்க பட்டிருந்த டொல்பின் ரக 8250000 ருபா பெறுமதியான வேன்,

இரவு வேளையில் கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றமை  குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வேன் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மஸ்கெலியா,

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரையில் மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் வலய குற்ற தடுப்பு பிரிவு அதிகாரி பணிப்புரைக்கமைய,

ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மேற் கொண்ட தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்படி குறித்த வேன் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை,

இரத்தினபுரி காவத்தை காவல் துறை பிரிவில் உள்ள ஒபேவத்தை பிரிவில் வைத்து கைது செய்ய பட்டதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயது உடைய காவத்தை ஒபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்க பட்ட விசாரணைக்கு அமைய குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற தடுப்பு பிரிவு மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மஸ்கெலியாவில் வாகனத் திருட்டுச் சம்பவத்துதுடன் தொடர்புடைய - சந்தேக நபர் ஓருவர் கைது கடந்த வாரம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்க பட்டிருந்த டொல்பின் ரக 8250000 ருபா பெறுமதியான வேன்,இரவு வேளையில் கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றமை  குறிப்பிடத்தக்கது.இது குறித்து சம்பந்தப்பட்ட வேன் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மஸ்கெலியா, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரையில் மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் வலய குற்ற தடுப்பு பிரிவு அதிகாரி பணிப்புரைக்கமைய,ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மேற் கொண்ட தீவிர விசாரணை நடத்தினர்.அதன்படி குறித்த வேன் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை, இரத்தினபுரி காவத்தை காவல் துறை பிரிவில் உள்ள ஒபேவத்தை பிரிவில் வைத்து கைது செய்ய பட்டதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயது உடைய காவத்தை ஒபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.சந்தேக நபரிடம் முன்னெடுக்க பட்ட விசாரணைக்கு அமைய குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற தடுப்பு பிரிவு மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement