போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ நகரில் நேற்று (14) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது சந்தேக நபர் 105,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம் மற்றும் 25 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், 08 1,000 ரூபா நாணயத்தாள்கள், 100 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 02 20 ரூபா நாணயத்தாள்கள் சந்தேக நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.
அதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகரில் நேற்று (14) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது சந்தேக நபர் 105,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம் மற்றும் 25 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், 08 1,000 ரூபா நாணயத்தாள்கள், 100 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 02 20 ரூபா நாணயத்தாள்கள் சந்தேக நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.அதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.