• Jan 15 2025

ஐந்தரை மணிநேரம் நடைபெற்ற தமிழரசின் மத்திய குழுக் கூட்டம் - முடிவுகள் எட்டப்படாமல் குழப்ப நிலை!

Tamil nila / Dec 14th 2024, 6:32 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் வழமையை விட அதிகமான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். இதனால் கூட்டத்தில்  குழப்ப நிலை ஏற்பட்டது.

"மாவை சேனாதிராஜா பதவி விலகி விட்டார். அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே, உடனடியாகக் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்" -  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.


மாவைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வருவீர்களா எனக்  கேட்குமாறு வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தபோது, "இது கோல் சென்ரர் அல்ல. இது கட்சி. இது உங்கள் வைத்தியசாலை அல்ல" - என்று இரா.சாணக்கியன் எம்.பி. பதில் அளித்தார்.

சாணக்கியன் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர். இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்தை உப தலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள், அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டி வரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.


தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையால் நீண்டநேரமாகக் கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் அந்த இடம் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்து சென்ற சுமந்திரன் அவரைச் சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில், காலை 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு மாவை சேனாதிராஜா தனது மகனுடன் வருகை தந்திருந்தார். இதன்போது, "உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த ஏலாது மாவை ஐயா. எனவே, அந்தக் கதிரையில் இருக்க வேண்டாம், இந்தப் பக்கம் இருங்கள்' - என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

அதனைப் பொருட்படுத்தாத மாவை சேனாதிராஜா, முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அதன்பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், மாவையின் தலைமைக்கு எதிராக அங்கு கண்டனக் குரல்கள் எழுந்தமையால் ஐந்தரை மணிநேரம் நடைபெற்ற கூட்டம் இறுதியில் முடிவின்றி முடிந்தது.

ஐந்தரை மணிநேரம் நடைபெற்ற தமிழரசின் மத்திய குழுக் கூட்டம் - முடிவுகள் எட்டப்படாமல் குழப்ப நிலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் வழமையை விட அதிகமான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். இதனால் கூட்டத்தில்  குழப்ப நிலை ஏற்பட்டது."மாவை சேனாதிராஜா பதவி விலகி விட்டார். அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே, உடனடியாகக் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்" -  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.மாவைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வருவீர்களா எனக்  கேட்குமாறு வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தபோது, "இது கோல் சென்ரர் அல்ல. இது கட்சி. இது உங்கள் வைத்தியசாலை அல்ல" - என்று இரா.சாணக்கியன் எம்.பி. பதில் அளித்தார்.சாணக்கியன் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர். இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கூட்டத்தை உப தலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள், அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டி வரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையால் நீண்டநேரமாகக் கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் அந்த இடம் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்து சென்ற சுமந்திரன் அவரைச் சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை.இந்நிலையில், காலை 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு மாவை சேனாதிராஜா தனது மகனுடன் வருகை தந்திருந்தார். இதன்போது, "உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த ஏலாது மாவை ஐயா. எனவே, அந்தக் கதிரையில் இருக்க வேண்டாம், இந்தப் பக்கம் இருங்கள்' - என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.அதனைப் பொருட்படுத்தாத மாவை சேனாதிராஜா, முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அதன்பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.எனினும், மாவையின் தலைமைக்கு எதிராக அங்கு கண்டனக் குரல்கள் எழுந்தமையால் ஐந்தரை மணிநேரம் நடைபெற்ற கூட்டம் இறுதியில் முடிவின்றி முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement