• Jul 26 2025

இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்து - எச்சரித்த சர்வதேச நாணய நிதியம்

IMF
Chithra / Jul 25th 2025, 8:27 am
image


இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்த உள்ளதாக  நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். 

ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அத்துடன், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

இந்த காரணிகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வின் போது கவனமாக மதிப்பீடு செய்யப்படும், 

இதில் திட்ட இலக்குகளில் சாத்தியங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்து - எச்சரித்த சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்த உள்ளதாக  நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த காரணிகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வின் போது கவனமாக மதிப்பீடு செய்யப்படும், இதில் திட்ட இலக்குகளில் சாத்தியங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement