• Nov 28 2024

அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன -கலையரசன் சுட்டிக்காட்டு.!!

Tamil nila / Feb 15th 2024, 8:09 pm
image

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலே ஐந்து பிரதேச செயலகங்கள் தமிழ்ப் பிரதேச செயலகங்களாகவும், சம்மாந்துறை, பொத்துவில் என்ற அடிப்படையில் சுமார் ஏழு பிரதேச செயலகங்களில் தமிழ் மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள். மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திலே எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறவில்லை. அப்பிரதேசத்திற்கென நிருவாகம் இருக்கின்றது. பிரதேச செயலாளரும் இருக்கின்றார். இந்த நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நாட்டிலே வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமாக விடயங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையே மேற்கொண்டு வருகின்றன. இதனை அரசாங்கம் மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று, மாகாணசபைகளுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆனால் இம்முறை அவ்வாறு இல்லை. 

இது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் என்று சொல்லப்படுகின்றது. பாராளுமன்றம் நடைபெறுகின்ற போது அவசர அவசரமாகச் சில கூட்டங்கள் நடைபெற்றன. இவ்வாறான நடைமுறைகளைத் திருத்த வேண்டும்.

இந்த அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாகவே இருந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன -கலையரசன் சுட்டிக்காட்டு. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அம்பாறை மாவட்டத்திலே ஐந்து பிரதேச செயலகங்கள் தமிழ்ப் பிரதேச செயலகங்களாகவும், சம்மாந்துறை, பொத்துவில் என்ற அடிப்படையில் சுமார் ஏழு பிரதேச செயலகங்களில் தமிழ் மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள். மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திலே எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறவில்லை. அப்பிரதேசத்திற்கென நிருவாகம் இருக்கின்றது. பிரதேச செயலாளரும் இருக்கின்றார். இந்த நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.இந்த நாட்டிலே வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமாக விடயங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையே மேற்கொண்டு வருகின்றன. இதனை அரசாங்கம் மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று, மாகாணசபைகளுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆனால் இம்முறை அவ்வாறு இல்லை. இது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் என்று சொல்லப்படுகின்றது. பாராளுமன்றம் நடைபெறுகின்ற போது அவசர அவசரமாகச் சில கூட்டங்கள் நடைபெற்றன. இவ்வாறான நடைமுறைகளைத் திருத்த வேண்டும்.இந்த அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாகவே இருந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement