இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரம்பரிய இந்து ஆலயங்களை அழித்து பௌத்த விகாரைகள், மடாலயங்களை அமைக்கும் முயற்சியை தடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக அளவில் இந்துக்கள் மற்றும் கோயில்களின் பாதுகாவலராக பாரதிய ஜனதா கட்சி விளங்குகின்றது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழம்பெரும் கோயில் அழிக்கப்படுகின்றன.
இந்துக்களின் கலாசார அடையாளங்கள் பௌத்த அடையாளங்களாக மாற்றப்படுகின்றன. இந்த விடயத்தில் பா. ஜ. க. மத்திய அரசு மௌனம் காக்கிறது.
இதேநேரம், புதுடில்லி சென்றுள்ள யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் குறைந்தது ஆயிரத்து 800 ஆலயங்களை இலங்கையின் அரச இயந்திரங்கள் அழித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பௌத்த மயமாகும் தமிழர் பகுதிகள். இந்திய அரசாங்கம் தலையிடவேண்டும்.தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.samugammedia இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரம்பரிய இந்து ஆலயங்களை அழித்து பௌத்த விகாரைகள், மடாலயங்களை அமைக்கும் முயற்சியை தடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உலக அளவில் இந்துக்கள் மற்றும் கோயில்களின் பாதுகாவலராக பாரதிய ஜனதா கட்சி விளங்குகின்றது.இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழம்பெரும் கோயில் அழிக்கப்படுகின்றன. இந்துக்களின் கலாசார அடையாளங்கள் பௌத்த அடையாளங்களாக மாற்றப்படுகின்றன. இந்த விடயத்தில் பா. ஜ. க. மத்திய அரசு மௌனம் காக்கிறது.இதேநேரம், புதுடில்லி சென்றுள்ள யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் குறைந்தது ஆயிரத்து 800 ஆலயங்களை இலங்கையின் அரச இயந்திரங்கள் அழித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.