• May 08 2025

பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதி - தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Dec 2nd 2024, 9:47 am
image


பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த சதித்திட்டங்களுக்காக வரையறையின்றி நிதியளித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே, சிங்கள இனத்தவர்களுக்கு இடையிலான பலம்வாய்ந்த பிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

எனினும், கட்டுக்கதைகளை நம்பும் போது, மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம் என்பன செல்லுபடியற்ற நூல்களாகிவிடுகின்றன.

அதன்பின்னர், வரலாறு பொய்யாகிப் போவதுடன், இந்த மண்ணின் மூத்த குடிகளான சிங்களவர்களுக்கு உள்ள உரிமையும் இல்லாது போகும். 

இந்த பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தக அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன. 

கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளது. 

இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.


பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதி - தேரர் பகிரங்க குற்றச்சாட்டு பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த சதித்திட்டங்களுக்காக வரையறையின்றி நிதியளித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே, சிங்கள இனத்தவர்களுக்கு இடையிலான பலம்வாய்ந்த பிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், கட்டுக்கதைகளை நம்பும் போது, மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம் என்பன செல்லுபடியற்ற நூல்களாகிவிடுகின்றன.அதன்பின்னர், வரலாறு பொய்யாகிப் போவதுடன், இந்த மண்ணின் மூத்த குடிகளான சிங்களவர்களுக்கு உள்ள உரிமையும் இல்லாது போகும். இந்த பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தக அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன. கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளது. இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now