இளைஞர்களின் இருப்பை தக்கவைத்து கொள்வதன் மூலமே தமிழீழம் சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய வடக்கை பொறுத்த வரைக்கும் இளைஞர்களுடன் பேசும்போது அவர்களின் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதனையும் பேசாமல் இருக்க முடியாது
வடக்கை பொறுத்தவரையில் இளைஞர்கள் குறைவு. ஏனென்று சொன்னால் இங்கு இருக்கிற இளைஞர் சமுதாயம் வேலை வாய்ப்புகளை தேடி வெளியேறிக்கொண்டிருக்கிறது.
முன்னொரு காலத்தில் நாங்கள் அரசியல் கைதிகளாக வேறு மாவட்டமாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று பொருளாதார ரீதியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று பெற்றோர்களும் யோசிக்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாது என்று. அவர்கள் எங்கேயாவது போயாவது பிளைக்கட்டும் என்று யோசிக்கிறார்கள்.
நாங்கள் காலம் காலமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று இளைஞர்களுக்கு தேவைப்படுகின்ற அரசியலை அதாவது நாங்கள் எழுந்து வாழ தேவைப்படுகின்ற அரசியல் வேண்டும். உணர்வு அரசியலுக்கும் உணர்ச்சி அரசியலுக்கும் வித்தியாசம் உண்டு. உணர்சி அரசியல் என்பது நான் அடிபட்டுவிட்டேன். விழுந்த இடத்திலிருந்து எழுந்து அடிப்பேன் என கத்திக்கொண்டிருப்பது.
உணர்வு அரசியல் என்பது இவ்வளவு விடயத்தையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு நாங்கள் மேலே வந்து எப்படி அடிக்கிறது என்பது தான் உணர்வு அரசியல்.
நான் நினைக்கிறேன் இன்று தேவைப்படுவது இந்த உணர்வு அரசியல் தான். இந்த அரசியல் தான் சாணக்கியத்தனமானது. நாங்கள் எங்களினுடைய இருப்பை தக்க வைத்தால் தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற அனைத்துமே சாத்தியமாகும்.
இன்று நாங்கள் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் எண்ணத்தை உருவாக்க வேண்டும். அவர்களை இங்கே வைத்து கொண்டால் தான் தமிழீழம் சாத்தியமாகும். நாங்கள் இதுவரை காலமும் போய்க்கொண்டிருக்கிற பல திசையில் பல முயற்சிகள் செய்துள்ளோம். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகளை பேசியிருந்தோம். நிச்சயமாக அது நிதர்சனமான உண்மை ஆனால் இன்று அந்த முயற்சிகள் போல தான் இந்த பொது வேட்பாளர்.
அதனூடாக நாங்கள் இன்று நாங்கள் என்னத்தை அடைந்திருக்கிறோம் என்பதை மீட்டு பார்க்க கூடியதாக இருக்கிறது.
ஆனால் இன்று எங்களினுடைய மக்களுடன் நாங்கள் வாழ வேண்டும். அவர்களினுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்களை தன்னிறைவாக்குவதற்கான முயற்சி எடுக்க வேண்டும். அவர்களை பலப்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் இருப்பை தக்கவைப்பதன் மூலமே தமிழீழம் சாத்தியமாகும் - அங்கஜன் தெரிவிப்பு இளைஞர்களின் இருப்பை தக்கவைத்து கொள்வதன் மூலமே தமிழீழம் சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய வடக்கை பொறுத்த வரைக்கும் இளைஞர்களுடன் பேசும்போது அவர்களின் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதனையும் பேசாமல் இருக்க முடியாதுவடக்கை பொறுத்தவரையில் இளைஞர்கள் குறைவு. ஏனென்று சொன்னால் இங்கு இருக்கிற இளைஞர் சமுதாயம் வேலை வாய்ப்புகளை தேடி வெளியேறிக்கொண்டிருக்கிறது.முன்னொரு காலத்தில் நாங்கள் அரசியல் கைதிகளாக வேறு மாவட்டமாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று பொருளாதார ரீதியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பெற்றோர்களும் யோசிக்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாது என்று. அவர்கள் எங்கேயாவது போயாவது பிளைக்கட்டும் என்று யோசிக்கிறார்கள். நாங்கள் காலம் காலமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று இளைஞர்களுக்கு தேவைப்படுகின்ற அரசியலை அதாவது நாங்கள் எழுந்து வாழ தேவைப்படுகின்ற அரசியல் வேண்டும். உணர்வு அரசியலுக்கும் உணர்ச்சி அரசியலுக்கும் வித்தியாசம் உண்டு. உணர்சி அரசியல் என்பது நான் அடிபட்டுவிட்டேன். விழுந்த இடத்திலிருந்து எழுந்து அடிப்பேன் என கத்திக்கொண்டிருப்பது. உணர்வு அரசியல் என்பது இவ்வளவு விடயத்தையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு நாங்கள் மேலே வந்து எப்படி அடிக்கிறது என்பது தான் உணர்வு அரசியல். நான் நினைக்கிறேன் இன்று தேவைப்படுவது இந்த உணர்வு அரசியல் தான். இந்த அரசியல் தான் சாணக்கியத்தனமானது. நாங்கள் எங்களினுடைய இருப்பை தக்க வைத்தால் தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற அனைத்துமே சாத்தியமாகும். இன்று நாங்கள் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்ய வேண்டும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் எண்ணத்தை உருவாக்க வேண்டும். அவர்களை இங்கே வைத்து கொண்டால் தான் தமிழீழம் சாத்தியமாகும். நாங்கள் இதுவரை காலமும் போய்க்கொண்டிருக்கிற பல திசையில் பல முயற்சிகள் செய்துள்ளோம். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகளை பேசியிருந்தோம். நிச்சயமாக அது நிதர்சனமான உண்மை ஆனால் இன்று அந்த முயற்சிகள் போல தான் இந்த பொது வேட்பாளர். அதனூடாக நாங்கள் இன்று நாங்கள் என்னத்தை அடைந்திருக்கிறோம் என்பதை மீட்டு பார்க்க கூடியதாக இருக்கிறது. ஆனால் இன்று எங்களினுடைய மக்களுடன் நாங்கள் வாழ வேண்டும். அவர்களினுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்களை தன்னிறைவாக்குவதற்கான முயற்சி எடுக்க வேண்டும். அவர்களை பலப்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.