• Nov 19 2024

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழில் ஆடிப்பிறப்பு விழா..!

Sharmi / Jul 18th 2024, 12:32 pm
image

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக நேற்றையதினம்(17) அராலி வடக்கு குலனையூரில் கொண்டாடப்பட்டது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆடிப்பிறப்பு விழா, குலனையூர் கலைவாணி சனசமூக நிலையம், கலைவாணி விளையாட்டுக்கழகம் ஆகினயவற்றின் அனுசரணையுடன் ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான ச.லலீசன் கலந்து கொண்டிருந்தார். 

இவர்களோடு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன், கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை.சரவணன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கலைவாணி சனசமூகநிலையத்தின் தலைவர் த.மதுசீலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகி, கலைவாணி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் நே.சாத்வீகனின் நன்றியுரையுடன் நிறைவுற்ற இவ்விழாவில் குலனையூரின் ஏராளமான மக்கள்  கலந்துகொண்டிருந்தார்கள்.

மாணவர்களின் ஆற்றுகையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. 

அனைவருக்கும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகி வரும் நிலையில் மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் கிராம மட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழில் ஆடிப்பிறப்பு விழா. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக நேற்றையதினம்(17) அராலி வடக்கு குலனையூரில் கொண்டாடப்பட்டது.தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆடிப்பிறப்பு விழா, குலனையூர் கலைவாணி சனசமூக நிலையம், கலைவாணி விளையாட்டுக்கழகம் ஆகினயவற்றின் அனுசரணையுடன் ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான ச.லலீசன் கலந்து கொண்டிருந்தார். இவர்களோடு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன், கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை.சரவணன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.கலைவாணி சனசமூகநிலையத்தின் தலைவர் த.மதுசீலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகி, கலைவாணி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் நே.சாத்வீகனின் நன்றியுரையுடன் நிறைவுற்ற இவ்விழாவில் குலனையூரின் ஏராளமான மக்கள்  கலந்துகொண்டிருந்தார்கள்.மாணவர்களின் ஆற்றுகையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. அனைவருக்கும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் பரிமாறப்பட்டதோடு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.தமிழர்களுக்கே உரித்தான ஒரு பண்பாட்டு அடையாளமான ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் தற்போது அருகி வரும் நிலையில் மீளவும் அதனை வெகுசனமயப்படுத்தும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் கிராம மட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஆடிப்பிறப்பைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement