தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
நேற்றையதினம்(21) ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பு அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன சந்திப்புகள் பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
குறிப்பாக நேற்றைய சந்திப்பில் வலி வடக்கு காணிகள் விடுவிப்பது, மாகாண சபை நேரடி நிதிகளைப் பெறும் தொகையை அதிகரிப்பது, யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி ஜனாதிபதி தனது கரிசனை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கிளிநொச்சி நவீன நகரமயமாக்கல் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு என்னை நியமித்துள்ளார்.
மேலும் , காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்ட நிலையில் குறித்த விடயங்களை கையாள்வதற்கு விசேட நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது மாகாண சபை அனுமதியுடன் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து மூன்று வருடங்களின் பின் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் கட்சிகள் சரிவர பயன்படுத்த வேண்டும். சுரேன் ராகவன் அட்வைஸ்.samugammedia தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடனான சந்திப்புக்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.நேற்றையதினம்(21) ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பு அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன சந்திப்புகள் பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.குறிப்பாக நேற்றைய சந்திப்பில் வலி வடக்கு காணிகள் விடுவிப்பது, மாகாண சபை நேரடி நிதிகளைப் பெறும் தொகையை அதிகரிப்பது, யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி ஜனாதிபதி தனது கரிசனை வெளியிட்டுள்ளார்.யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கிளிநொச்சி நவீன நகரமயமாக்கல் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு என்னை நியமித்துள்ளார்.மேலும் , காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்ட நிலையில் குறித்த விடயங்களை கையாள்வதற்கு விசேட நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.அதுமட்டுமல்லாது மாகாண சபை அனுமதியுடன் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து மூன்று வருடங்களின் பின் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.