தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்.ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (26) காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும் கிழக்கில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படும்.
இந்த மாபெரும் போராட்டங்களில் மதத் தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வழந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச நீதியை மட்டுமே தமிழ் மக்கள் கோருகின்றார்கள்; முல்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவர் கோரிக்கை தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்.ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இன்று (26) காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும் கிழக்கில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படும்.இந்த மாபெரும் போராட்டங்களில் மதத் தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வழந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.