• Jan 16 2025

மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் - இலங்கை ஏதிலிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Chithra / Jan 13th 2025, 7:58 am
image

 

சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பல காலமாக ஏதிலிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன்தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

இதேவேளை அயலக தமிழர் மாநாடு சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது, இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்

மேலும் மு.க ஸ்டாலினுக்குக்கு செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.


மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் - இலங்கை ஏதிலிகள் தொடர்பில் கலந்துரையாடல்  சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.இதன்போது, புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.பல காலமாக ஏதிலிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன்தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்இதேவேளை அயலக தமிழர் மாநாடு சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.இக்கலந்துரையாடலின்போது, இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்மேலும் மு.க ஸ்டாலினுக்குக்கு செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement