• Dec 09 2024

பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் உணர்வாளர் அமைப்பினர்..!

Sharmi / Sep 30th 2024, 12:46 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிறக்கவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

அதேவேளை, ஊழல்கள்,மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் உணர்வாளர் அமைப்பினர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிறக்கவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.அதேவேளை, ஊழல்கள்,மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement