• Oct 28 2024

சக ஆசிரியையின் தாலி கொடியை கொள்ளையிட்ட ஆசிரியை கைது! samugammedia

Tamil nila / Jul 28th 2023, 10:04 pm
image

Advertisement

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.

தாலி கொடியின் உரிமையாளரான  ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தத் ஆரம்பித்துள்ளார்..

அப்போது, ​​அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், பின்னர் திரும்பி வந்து, தனது கைப்பையில் இருந்த தாலி கொடியை பார்த்த போது, அது இல்லாததால், சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

பின்னர், அதிபர் வந்து மாணவர்களிடம் விசாரித்ததில், மற்றொரு ஆசிரியை அவரது கைப்பையை திறந்து பார்த்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் வந்து சந்தேகநபரான ஆசிரியையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட அவர், திருடிய நகையை பாடசாலையின் பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

பின்னர், சந்தேகத்திற்குரிய ஆசிரியரை பொலிசார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சக ஆசிரியையின் தாலி கொடியை கொள்ளையிட்ட ஆசிரியை கைது samugammedia உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.தாலி கொடியின் உரிமையாளரான  ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தத் ஆரம்பித்துள்ளார்.அப்போது, ​​அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், பின்னர் திரும்பி வந்து, தனது கைப்பையில் இருந்த தாலி கொடியை பார்த்த போது, அது இல்லாததால், சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.பின்னர், அதிபர் வந்து மாணவர்களிடம் விசாரித்ததில், மற்றொரு ஆசிரியை அவரது கைப்பையை திறந்து பார்த்தது தெரியவந்தது.பின்னர் சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் வந்து சந்தேகநபரான ஆசிரியையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட அவர், திருடிய நகையை பாடசாலையின் பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  பின்னர், சந்தேகத்திற்குரிய ஆசிரியரை பொலிசார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement