• Oct 28 2024

இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களில் 45 பாலஸ்தீனியர்கள் பலி!

Tamil nila / Oct 28th 2024, 9:22 pm
image

Advertisement

இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பற்றா அல்-சிசி தெரிவித்துள்ளார். 

 ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக நடைபெறும் இந்த மோதலை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று குறித்து முன்மொழியப்பட்டுள்ளது. 

 இந்த திட்டத்திற்கு அமைய சில பாலஸ்தீனிய கைதிகளுக்காக, ஹமாசின் நான்கு இஸ்ரேலிய பணய கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 

 இது தவிர, யுத்தத்தின் கோரத்தை தணிக்கும் நோக்கில் கட்டாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த சமாதான பேச்சுவார்த்தைகள் மீளவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க மத்திய புலனாய்வு பணிப்பாளர்களும் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட்டின் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எகிப்தினால் முன்மொழியப்பட்ட புதிய திட்டம் குறித்து இஸ்ரேலோ அல்லது ஹமாஸ் தரப்பினரோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

 ஆனால், கட்டாரில் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ள பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் முன்மொழிவினை வரவேற்றுள்ளார். 

 எப்படியிருப்பினும், சமாதான பேச்சுவார்த்தைகளினூடாக எட்டப்படும் ஒப்பந்தத்தில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய துருப்பினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, காசாவில் ஹமாஸ் ஒரு இராணுவ சக்தியாகவும், ஆட்சியினை முன்னெடுக்கும் அமைப்பாக செயல்படுவதில் இருந்து முற்றாக அகற்றப்பட்டதன் பின்னரே தாக்குதல்கள் நிறுத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களில் 45 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பற்றா அல்-சிசி தெரிவித்துள்ளார்.  ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக நடைபெறும் இந்த மோதலை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று குறித்து முன்மொழியப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு அமைய சில பாலஸ்தீனிய கைதிகளுக்காக, ஹமாசின் நான்கு இஸ்ரேலிய பணய கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அவர் முன்மொழிந்துள்ளார்.  இது தவிர, யுத்தத்தின் கோரத்தை தணிக்கும் நோக்கில் கட்டாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த சமாதான பேச்சுவார்த்தைகள் மீளவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க மத்திய புலனாய்வு பணிப்பாளர்களும் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட்டின் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எகிப்தினால் முன்மொழியப்பட்ட புதிய திட்டம் குறித்து இஸ்ரேலோ அல்லது ஹமாஸ் தரப்பினரோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.  ஆனால், கட்டாரில் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ள பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் முன்மொழிவினை வரவேற்றுள்ளார்.  எப்படியிருப்பினும், சமாதான பேச்சுவார்த்தைகளினூடாக எட்டப்படும் ஒப்பந்தத்தில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய துருப்பினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, காசாவில் ஹமாஸ் ஒரு இராணுவ சக்தியாகவும், ஆட்சியினை முன்னெடுக்கும் அமைப்பாக செயல்படுவதில் இருந்து முற்றாக அகற்றப்பட்டதன் பின்னரே தாக்குதல்கள் நிறுத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement