தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Srilanka) வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வவுனியா மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களும் பாடசாலையின் இவ்வாண்டுக்கான முதல் நாளில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.
அதற்கமைவாக, வவுனியா தெற்கு வலயத்தின் அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை காலை ஒன்று கூடலின் போது பாடசாலை அதிபர் எம்.எம்.அன்பஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் க்ளீன் ஸ்ரீலங்கா என்ற உறுதியுரையை எடுத்துக் கொண்டதுடன் தமது கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில், அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட உறுதியுரையுடன் பணிகளை ஆரம்பித்த ஆசிரியர்கள். தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Srilanka) வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் வவுனியா மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களும் பாடசாலையின் இவ்வாண்டுக்கான முதல் நாளில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.அதற்கமைவாக, வவுனியா தெற்கு வலயத்தின் அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை காலை ஒன்று கூடலின் போது பாடசாலை அதிபர் எம்.எம்.அன்பஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் க்ளீன் ஸ்ரீலங்கா என்ற உறுதியுரையை எடுத்துக் கொண்டதுடன் தமது கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில், அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.