• Mar 17 2025

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று போராட்டம்

Chithra / Mar 17th 2025, 4:12 pm
image



நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று(17) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டமானது இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றுள்ள நிலையில், முற்பகல் 11:30 மணி முதல் 12.30 மணி வரையான காலப் பகுதியில் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி தாதியர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சு பாதீட்டில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமையால் இன்று இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பாலுமகேந்திரா தெரிவித்தார்.


யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று போராட்டம் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று(17) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்தப் போராட்டமானது இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றுள்ள நிலையில், முற்பகல் 11:30 மணி முதல் 12.30 மணி வரையான காலப் பகுதியில் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி தாதியர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சு பாதீட்டில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமையால் இன்று இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பாலுமகேந்திரா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement