• Nov 19 2024

சவாலுக்காக 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட இளம்பெண்- வயிறு சிதைந்து உயிரிழப்பு!

Tamil nila / Jul 22nd 2024, 7:47 pm
image

சீனாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்  சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்டதால்  உயிரிழந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவாலை ஏற்று அதிகமாக சாப்பிட்டு நேரலையில் உயிரிழந்தார்.

அந்த இளம்பெண்ணின் பெயர் பான் ஜோதிங். அவருக்கு 24 வயது.  அவர் சாப்பிடும் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து வீடியோக்களை உருவாக்குகி வந்துள்ளார். 

சில நேரங்களில் அவர் 10 கிலோவுக்கு மேல் உணவை உண்ணுவாராம்.  ஆனால் அவரது பெற்றோர் இப்படி சாப்பிடுவதை எச்சரித்து வந்தனர்.  ஆனால், அவர் அவர்களின் வார்த்தைகளைக் கவனிக்கவில்லை.

வழக்கம் போல் அவர் சாப்பிடும் சவாலை ஏற்றுக் கொண்டு,  10 மணிநேரம் சாப்பிட்டுள்ளார்.

அவர் சாப்பிடும் போது உடல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்.  பின்னர் அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது வயிறு கடுமையாக சிதைந்திருந்ததும், அவரது வயிற்றில் செரிக்கப்படாத உணவு இருந்தது தெரிய வந்தது.


சவாலுக்காக 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட இளம்பெண்- வயிறு சிதைந்து உயிரிழப்பு சீனாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்  சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்டதால்  உயிரிழந்துள்ளார்.சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவாலை ஏற்று அதிகமாக சாப்பிட்டு நேரலையில் உயிரிழந்தார்.அந்த இளம்பெண்ணின் பெயர் பான் ஜோதிங். அவருக்கு 24 வயது.  அவர் சாப்பிடும் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து வீடியோக்களை உருவாக்குகி வந்துள்ளார். சில நேரங்களில் அவர் 10 கிலோவுக்கு மேல் உணவை உண்ணுவாராம்.  ஆனால் அவரது பெற்றோர் இப்படி சாப்பிடுவதை எச்சரித்து வந்தனர்.  ஆனால், அவர் அவர்களின் வார்த்தைகளைக் கவனிக்கவில்லை.வழக்கம் போல் அவர் சாப்பிடும் சவாலை ஏற்றுக் கொண்டு,  10 மணிநேரம் சாப்பிட்டுள்ளார்.அவர் சாப்பிடும் போது உடல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்.  பின்னர் அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது வயிறு கடுமையாக சிதைந்திருந்ததும், அவரது வயிற்றில் செரிக்கப்படாத உணவு இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

Advertisement