• Apr 01 2025

மறுவாழ்வு நிலையத்தில் உயிரிழந்த இளைஞன்; கொலையென சந்தேகம்!

Chithra / Mar 29th 2025, 1:11 pm
image

 

மினுவாங்கொடை, பென்சில்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவரே உயிரிழந்தார்.  

இளைஞனை தாக்கியதாலேயே மரணம் ஏற்பட்டதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞரை அடித்து கைவிலங்கிடப்பட்டதாகவும், காலில் இரும்புச் சங்கிலிகள் போடப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞனை மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

மறுவாழ்வு நிலையத்தில் உயிரிழந்த இளைஞன்; கொலையென சந்தேகம்  மினுவாங்கொடை, பென்சில்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.கம்பஹா கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவரே உயிரிழந்தார்.  இளைஞனை தாக்கியதாலேயே மரணம் ஏற்பட்டதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இளைஞரை அடித்து கைவிலங்கிடப்பட்டதாகவும், காலில் இரும்புச் சங்கிலிகள் போடப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த இளைஞனை மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement