• Jan 23 2025

நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி யாழில் இளைஞன் உயிரிழப்பு!

Tamil nila / Feb 26th 2024, 10:16 pm
image

மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 

மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் 25ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி யாழில் இளைஞன் உயிரிழப்பு மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் 25ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement