யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
துர்க்கை அம்மனின் மகோற்சவ பெருவிழாவின் 10ஆம் நாள் இன்றாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் மலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன், சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அத்துடன் சப்பறத்தில் எழுந்தருளியா துர்க்கை அம்மன் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இன்றைய நாள் சப்பறத் திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் தேர்த்திருவிழாவிலும் இன்னும் திரளாக மக்கள் கலந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய சப்பறத்திருவிழா யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.துர்க்கை அம்மனின் மகோற்சவ பெருவிழாவின் 10ஆம் நாள் இன்றாகும்.அந்த வகையில் இன்றைய தினம் மலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன், சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.அத்துடன் சப்பறத்தில் எழுந்தருளியா துர்க்கை அம்மன் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளமை விசேட அம்சமாகும். இன்றைய நாள் சப்பறத் திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் தேர்த்திருவிழாவிலும் இன்னும் திரளாக மக்கள் கலந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.