• Jul 27 2024

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் - வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை..!samugammedia

Tharun / Feb 27th 2024, 7:40 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பஸ் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பஸ்களின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் - வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை.samugammedia யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பஸ் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பஸ்களின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement