• Oct 30 2024

டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்...!samugammedia

Anaath / Nov 1st 2023, 6:11 pm
image

Advertisement

ஜெர்மனியின் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு (Alexander Zverev) பெர்லின் நீதிமன்றம் 4 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்களை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 2020 ஆம் ஆண்டில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காகவே இவ்வாறு  அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் குறித்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளநிலையில், பெர்லின் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்.samugammedia ஜெர்மனியின் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு (Alexander Zverev) பெர்லின் நீதிமன்றம் 4 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்களை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 2020 ஆம் ஆண்டில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காகவே இவ்வாறு  அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் குறித்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளநிலையில், பெர்லின் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement