• Nov 23 2024

முல்லைத்தீவின் முக்கிய பகுதியில் மீனவர்களிடையே முறுகல்....! களத்தில் இறங்கிய அமைச்சர் டக்ளஸ்...!

Sharmi / Feb 28th 2024, 3:40 pm
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(28) முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகை தந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களுக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், குறித்த பகுதியில் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட யாருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளருக்கு  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் முக்கிய பகுதியில் மீனவர்களிடையே முறுகல். களத்தில் இறங்கிய அமைச்சர் டக்ளஸ். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(28) முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகை தந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்போது, குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களுக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.இந்நிலையில், குறித்த பகுதியை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், குறித்த பகுதியில் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட யாருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளருக்கு  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement