• May 20 2024

அஹுங்கல்லயில் பதற்றம் – இரு குழுக்களுக்கிடையில் அசிட் தாக்குதல்! 6 பேர் காயம் samugammedia

Chithra / Oct 11th 2023, 4:09 pm
image

Advertisement


அஹுங்கல்ல பதிராஜகம பகுதியில் இன்று (11) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் அசிட் (அமிலம்) வீச்சு மற்றும் மோதல் ஏற்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலில் இரு குழுக்களிலும் 3 பேர் வீதம் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், இந்த அறுவரில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மற்றைய தரப்பினரின் அசிட் வீச்சு மற்றும் சரமாரியான தாக்குதல்களினால் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அஹுங்கல்லயில் பதற்றம் – இரு குழுக்களுக்கிடையில் அசிட் தாக்குதல் 6 பேர் காயம் samugammedia அஹுங்கல்ல பதிராஜகம பகுதியில் இன்று (11) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் அசிட் (அமிலம்) வீச்சு மற்றும் மோதல் ஏற்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த மோதலில் இரு குழுக்களிலும் 3 பேர் வீதம் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், இந்த அறுவரில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மற்றைய தரப்பினரின் அசிட் வீச்சு மற்றும் சரமாரியான தாக்குதல்களினால் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement