• Apr 29 2026

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் பதற்றம் - போராட்டக்காரர்களை சாணியால் தாக்கி விரட்டிய மக்கள்

Chithra / Apr 28th 2026, 12:27 pm
image

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் அக்குரேகொட பகுதியில் உள்ள வீட்டிற்கு முன் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  


திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 


சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட 'நவ ஜனதா பெரமுன' கட்சியின் ஆதரவாளர்  குழுவினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 


அங்கு அவர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது பொதுமக்கள் சிலர் முட்டை மற்றும் சாணியால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அப் பகுதியில் பதற்றம் நிலவியது. 


இந்நிலையில்  பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். 

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் பதற்றம் - போராட்டக்காரர்களை சாணியால் தாக்கி விரட்டிய மக்கள் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் அக்குரேகொட பகுதியில் உள்ள வீட்டிற்கு முன் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட 'நவ ஜனதா பெரமுன' கட்சியின் ஆதரவாளர்  குழுவினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது பொதுமக்கள் சிலர் முட்டை மற்றும் சாணியால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அப் பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்  பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். 

Advertisement

Advertisement

Advertisement