• Dec 14 2024

அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார் - கணவன் - மனைவி வைத்தியசாலையில்..!

Chithra / May 27th 2024, 11:02 am
image

 

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும்  மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று  காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார் - கணவன் - மனைவி வைத்தியசாலையில்.  மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும்  மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்துச் சம்பவம் இன்று  காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement