தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை வேறு இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் அன்றி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு கொழும்பில் உள்ள மற்றுமொரு இடம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக அரசியல் விவகாரங்கள் மற்றும் தொகுதிகள், மாவட்ட அமைப்பாளர்களை நிரந்தரமாக கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, புதிய அரசியல் நிலையமொன்றை ஆரம்பித்து, எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வரவழைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; கொழும்புக்கு வரவழைக்கப்படவுள்ள முக்கியஸ்தர்கள். மைத்திரியின் அதிரடி முடிவு தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை வேறு இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் அன்றி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு கொழும்பில் உள்ள மற்றுமொரு இடம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக அரசியல் விவகாரங்கள் மற்றும் தொகுதிகள், மாவட்ட அமைப்பாளர்களை நிரந்தரமாக கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்படி, புதிய அரசியல் நிலையமொன்றை ஆரம்பித்து, எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வரவழைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.