• Jan 27 2025

சூடான் வைத்தியசாலையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி

Tharmini / Jan 27th 2025, 9:23 am
image

சூடானில் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு இந்தத் தாக்குதலை "சர்வதேச சட்ட மீறல்" என தெரிவித்துள்ளது.

சூடானில் சுகாதாரப் பாதுகாப்பு மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு தாம் தொடர்ந்து அழைப்பு விடுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

சூடான் வைத்தியசாலையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி சூடானில் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு இந்தத் தாக்குதலை "சர்வதேச சட்ட மீறல்" என தெரிவித்துள்ளது.சூடானில் சுகாதாரப் பாதுகாப்பு மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு தாம் தொடர்ந்து அழைப்பு விடுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement