2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்று (27) ஆரம்பமாகிறது.
மீள் திருத்த விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
குறித்த பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்று (27) ஆரம்பமாகிறது.மீள் திருத்த விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.குறித்த பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.