• Sep 19 2024

பயங்கரவாத சட்டம் எமக்கு புதிதல்ல! ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்தோம்! – மூத்த ஊடகவியலாளர் தெரிவிப்பு samugammedia

Chithra / May 3rd 2023, 2:23 pm
image

Advertisement

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்தோம் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசு தயங்குகின்றது. பயங்கரவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது.

இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் .இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம்.

எங்களை சுடுகின்றார்கள், எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது. நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம்.

எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

பேனா தூக்கிய அனைத்து ஊடகவியலாளர்களும் உயிர் இருக்கும் வரை கூறிக்கொண்டே இருப்போம் சுடப்பட்டது அநீதி.

சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும், நீதி வேண்டும், சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும், சர்வதேசம் சர்வதேசம் என்று நாங்கள் சொல்கின்றோம். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.

விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன.

இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம் எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்தோம் – மூத்த ஊடகவியலாளர் தெரிவிப்பு samugammedia பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்தோம் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார்சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசு தயங்குகின்றது. பயங்கரவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது.இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் .இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம்.எங்களை சுடுகின்றார்கள், எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது. நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம்.எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்னபேனா தூக்கிய அனைத்து ஊடகவியலாளர்களும் உயிர் இருக்கும் வரை கூறிக்கொண்டே இருப்போம் சுடப்பட்டது அநீதி.சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும், நீதி வேண்டும், சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும், சர்வதேசம் சர்வதேசம் என்று நாங்கள் சொல்கின்றோம். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன.இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம் எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement