• Sep 19 2024

பூநகரியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்: மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு...!samugammedia

Sharmi / May 3rd 2023, 2:24 pm
image

Advertisement

பூநகரி கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கான அனுமதிக்காக கோரப்பட்டது. அதன் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்  தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும், இன்றே அறிய முடிந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எஸ்.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், இது தொடர்பில் ஆராய்ந்தே அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், மன்னாரில் மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பில் ஆராய்ந்தே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் விபரங்களை பெற்று தனியாக கூடி ஆராய்ந்த பின்பே அனுமதி வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது, அதானி நிறுவன ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பூநகரியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்: மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு.samugammedia பூநகரி கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கான அனுமதிக்காக கோரப்பட்டது. அதன் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்  தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும், இன்றே அறிய முடிந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எஸ்.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், இது தொடர்பில் ஆராய்ந்தே அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், மன்னாரில் மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பில் ஆராய்ந்தே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் விபரங்களை பெற்று தனியாக கூடி ஆராய்ந்த பின்பே அனுமதி வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.இதன்போது, அதானி நிறுவன ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement