• Nov 23 2024

பயங்கரவாதிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் - அரசுக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் வழங்கிய ஆலோசனை

Chithra / Oct 24th 2024, 1:10 pm
image

பயங்கரவாதிகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியது.

தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் வெளிவருவதை தடுத்திருக்க முடியும்.

வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையிலும் நாட்டிலும் இத்தகைய அச்சுறுத்தல்களின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறான எச்சரிக்கைகள் சுற்றுலாத்துறையை பாதிப்பது மட்டுமன்றி பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும், இலங்கையின் அந்நிய செலாவணியை நேரடியாக பாதிக்கும், தொழில் வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் - அரசுக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் வழங்கிய ஆலோசனை பயங்கரவாதிகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியது.தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் வெளிவருவதை தடுத்திருக்க முடியும்.வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையிலும் நாட்டிலும் இத்தகைய அச்சுறுத்தல்களின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறான எச்சரிக்கைகள் சுற்றுலாத்துறையை பாதிப்பது மட்டுமன்றி பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும், இலங்கையின் அந்நிய செலாவணியை நேரடியாக பாதிக்கும், தொழில் வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement