தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த 24 ஆம் திகதி தொடங்கிய எல்லை மோதல், இரு நாடுகளுக்குமான பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கம்போடியா தற்போது உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது.
தாய்லாந்து விமானங்கள், கம்போடியப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கம்போடியா, தாய்லாந்து படைகள் ஒப்பந்தங்களை மீறி ஒரு புனித விகாரை நோக்கி முன்னேறியதாக குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தால் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 1,30இ000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
எல்லை தற்போது மூடப்பட்டுள்ளது
தாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் மாகாணங்களில் 14 பொதுமக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர்
அதேவேளை கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும். 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறினர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தாய்லாந்து இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், மூன்றாம் தரப்பு சமரச பேச்சுவார்த்தை தேவையில்லை என்றும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
தாய்லாந்து-கம்போடியா மோதல் தீவிரம் – கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த 24 ஆம் திகதி தொடங்கிய எல்லை மோதல், இரு நாடுகளுக்குமான பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கம்போடியா தற்போது உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது. தாய்லாந்து விமானங்கள், கம்போடியப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கம்போடியா, தாய்லாந்து படைகள் ஒப்பந்தங்களை மீறி ஒரு புனித விகாரை நோக்கி முன்னேறியதாக குற்றம் சாட்டியுள்ளது. இச்சம்பவத்தால் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 1,30இ000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். எல்லை தற்போது மூடப்பட்டுள்ளதுதாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் மாகாணங்களில் 14 பொதுமக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர் அதேவேளை கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும். 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறினர்.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தாய்லாந்து இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மூன்றாம் தரப்பு சமரச பேச்சுவார்த்தை தேவையில்லை என்றும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.