• Feb 25 2025

ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சனையைக்கு தீர்வு- சிவசேனை அமைப்பினர் உறுதி

Thansita / Feb 24th 2025, 10:08 pm
image

தையிட்டி  விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 

மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். 

இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம்.

அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.

அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என தெரிவித்தனர்

ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சனையைக்கு தீர்வு- சிவசேனை அமைப்பினர் உறுதி தையிட்டி  விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம்.அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement