பாராளுமன்றத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் அவர்களது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசியகூட்டணி சார்பில் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுவை வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரித்திருந்தார்.
குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டணியினை சேர்ந்த வன்னி மாவட்ட வேட்பாளர் ப.உதயராசா மற்றும் மூவரால் உயர்நீதிமன்றில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்றையதினம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனநாயக தேசியகூட்டணியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அலுவலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை குறித்த தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளதாக தெரிவித்துள்ள ப.உதயராசா எமக்கு துணையாக நின்ற அனைத்து தரப்புக்களுக்கும் குறிப்பாக வன்னி மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் எமது வெற்றியினை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எமக்கு துணையாக நின்ற அனைத்து தரப்புக்களுக்கும் குறிப்பாக வன்னி மக்களுக்கு நன்றி - ப.உதயராசா பாராளுமன்றத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் அவர்களது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசியகூட்டணி சார்பில் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுவை வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரித்திருந்தார்.குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டணியினை சேர்ந்த வன்னி மாவட்ட வேட்பாளர் ப.உதயராசா மற்றும் மூவரால் உயர்நீதிமன்றில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்றையதினம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனநாயக தேசியகூட்டணியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அலுவலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதேவேளை குறித்த தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளதாக தெரிவித்துள்ள ப.உதயராசா எமக்கு துணையாக நின்ற அனைத்து தரப்புக்களுக்கும் குறிப்பாக வன்னி மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் எமது வெற்றியினை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.