திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 28வது நினைவுதின அஞ்சலி நிகழ்வு மூதூரில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது அ.தங்கத்துரையின் சொந்த ஊரான கிளிவெட்டியிலுள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன், மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், அமரர் அ.தங்கத்துரையின் குடும்ப உறுப்பினர்கள், பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் 5ம் திகதி மாலை திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தைத் திறந்து வைத்துவிட்டு வெளிவந்த சமயம் குண்டுத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருமலையில் முன்னாள் எம்.பி. அ.தங்கத்துரையின் 28வது நினைவுதினம் அனுஸ்டிப்பு திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 28வது நினைவுதின அஞ்சலி நிகழ்வு மூதூரில் இன்று காலை இடம்பெற்றது.இதன்போது அ.தங்கத்துரையின் சொந்த ஊரான கிளிவெட்டியிலுள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன், மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், அமரர் அ.தங்கத்துரையின் குடும்ப உறுப்பினர்கள், பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் 5ம் திகதி மாலை திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தைத் திறந்து வைத்துவிட்டு வெளிவந்த சமயம் குண்டுத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.