• May 03 2025

தாவடியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..!

Sharmi / Sep 2nd 2024, 3:00 pm
image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலி.தெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரையாற்றினார்.

குறித்த நினைவஞ்சலியில், வி.தர்மலிங்கத்தின் மகனும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதுடன், இதேநாளிலேயே கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரமும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




தாவடியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலி.தெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது.இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரையாற்றினார்.குறித்த நினைவஞ்சலியில், வி.தர்மலிங்கத்தின் மகனும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதுடன், இதேநாளிலேயே கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரமும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now