• Dec 09 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Aug 24th 2024, 8:27 am
image

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் பின்னர் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

சில வேட்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பல வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து போட்டியிடாத வேட்பாளர்களுக்கு வேறு வேட்பாளர்களை பணியமர்த்த முடியாது.

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3,000 அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் பின்னர் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.சில வேட்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பல வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து போட்டியிடாத வேட்பாளர்களுக்கு வேறு வேட்பாளர்களை பணியமர்த்த முடியாது.உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3,000 அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement