மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த ராணுவத்தின் நத்தார் கரோல் நிகழ்வு நேற்றையதினம்(19) மாலை 6.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜே.பி.சி.பீரிஸ், மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிறிஸ்து பிறப்பையொட்டி இராணுவத்தின் இசைக்குழுவின் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாணவர்களின் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டது.
அதேவேளை, கரோல் கீதங்கள் இசைத்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராணுவத்தினால் வான வேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் களைகட்டிய இராணுவத்தின் கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்வு. மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த ராணுவத்தின் நத்தார் கரோல் நிகழ்வு நேற்றையதினம்(19) மாலை 6.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜே.பி.சி.பீரிஸ், மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.இதன்போது கிறிஸ்து பிறப்பையொட்டி இராணுவத்தின் இசைக்குழுவின் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டது.மேலும் மன்னார் மாணவர்களின் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டது.அதேவேளை, கரோல் கீதங்கள் இசைத்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இராணுவத்தினால் வான வேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.