• Dec 20 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு - நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் பொலிஸார்

Chithra / Dec 20th 2024, 1:50 pm
image

 

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை  தயாரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண 500க்கும் மேற்பட்ட சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு - நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் பொலிஸார்  எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை  தயாரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதேவேளை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண 500க்கும் மேற்பட்ட சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement