• May 17 2024

வல்வெட்டித்துறையில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று! samugammedia

Tamil nila / Jul 18th 2023, 10:19 pm
image

Advertisement

மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன்  என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில், கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.


பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




வல்வெட்டித்துறையில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று samugammedia மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன்  என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில், கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement