• Nov 24 2024

Sharmi / May 6th 2024, 8:52 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பரீட்சை நிலையங்களை இணைப்புச்செய்யும் வகையில் 14 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் இதில் தமிழ் மொழியில் 13826 சிங்கள மொழியில் 10பேரும் ஆங்கில மொழியில் 66பேரும் தோற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதங்களைப்பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

யாழ் மாவட்டம்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின.

இந்த பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை மாவட்டம்


திருகோணமலை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு இன்றையதினம்(06) காலை ஆர்வமாக  வருகை தந்திருந்தனர்.

இதன் போது மாணவர்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சை சென்றதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. 



வவுனியா மாவட்டம்

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று(06) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309  பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 06.05.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஆண்டு 33 பரீட்சை நிலையங்கள்  4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.

பாடசாலை ரீதியாக 3519 பரீட்சார்த்திகள் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 4026 பேரும் பரீட்சை தோற்றும் மாணவர்கள்

ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்டதின் பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது.


ஆரம்பமானது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமானது.மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.பரீட்சை நிலையங்களை இணைப்புச்செய்யும் வகையில் 14 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் இதில் தமிழ் மொழியில் 13826 சிங்கள மொழியில் 10பேரும் ஆங்கில மொழியில் 66பேரும் தோற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதங்களைப்பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.யாழ் மாவட்டம்2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின.இந்த பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அந்தவகையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை மாவட்டம்திருகோணமலை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு இன்றையதினம்(06) காலை ஆர்வமாக  வருகை தந்திருந்தனர்.இதன் போது மாணவர்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சை சென்றதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. வவுனியா மாவட்டம்நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று(06) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுஅந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309  பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.கிளிநொச்சி மாவட்டம்கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 06.05.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஆண்டு 33 பரீட்சை நிலையங்கள்  4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.பாடசாலை ரீதியாக 3519 பரீட்சார்த்திகள் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 4026 பேரும் பரீட்சை தோற்றும் மாணவர்கள்ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்டதின் பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement