• Feb 20 2025

பாழடைந்த வீட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

Chithra / Feb 17th 2025, 7:21 am
image


கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் உடல் முழுவதிலும் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாழடைந்த வீடொன்றில் மேற்படி இளைஞரின் சடலம் காணப்பட்டுள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞர் சிலரால் கடத்தி வரப்பட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அத்தனகல்லை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாழடைந்த வீட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் உடல் முழுவதிலும் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பாழடைந்த வீடொன்றில் மேற்படி இளைஞரின் சடலம் காணப்பட்டுள்ளது.கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இளைஞர் சிலரால் கடத்தி வரப்பட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அத்தனகல்லை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement