• May 11 2025

சிறிய தாயினால் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்- பொலிஸார் எடுத்த நடவடிக்கை..!

Sharmi / Aug 23rd 2024, 1:44 pm
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவன் ஒருவனை அவனது சிறிய தாயார் கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் இந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள ஒரு மாணவன் ஆவார். 

இச்சிறுவனின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் வேலைக்காக சென்றிருந்தபோது சிறிய தாயாரின் கொடூர சித்திரவதைக்கு சிறுவன் உள்ளாகிய நிலையில், நேற்று லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை தரப்பு தெரிவித்தது. 

சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சிறுவனின் சிறிய தாய், விசாரணைகளுக்காக தற்போது லிந்துலை பொலிஸ் நிலையத்தில் அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 


சிறிய தாயினால் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்- பொலிஸார் எடுத்த நடவடிக்கை. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவன் ஒருவனை அவனது சிறிய தாயார் கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது.குறித்த சிறுவன் இந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள ஒரு மாணவன் ஆவார். இச்சிறுவனின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் வேலைக்காக சென்றிருந்தபோது சிறிய தாயாரின் கொடூர சித்திரவதைக்கு சிறுவன் உள்ளாகிய நிலையில், நேற்று லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை தரப்பு தெரிவித்தது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சிறுவனின் சிறிய தாய், விசாரணைகளுக்காக தற்போது லிந்துலை பொலிஸ் நிலையத்தில் அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now