• Sep 20 2024

யாழில் ஏழு நாய்க் குட்டிகளை எரித்த விவகாரம்; பொலிஸார் தீவிர விசாரணை! samugammedia

Chithra / Jun 22nd 2023, 11:31 am
image

Advertisement

மிருசுவில் தவசிகுளம் பகுதியில் நபர் ஒருவர் ஏழு நாய்க்குட்டிகளை தீயிட்டு எரித்ததாக தொலைபேசி வாயிலாக மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் புதன்கிழமை (21) ஆரம்பித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் பிறந்த ஒரு மாதம் கூட நிறைவடையாத ஏழு நாய்க்குட்டிகளை அவரது தூக்கத்திற்கு இடையூறு விளைவித்ததால் குப்பைக் கிடங்கிற்குள் உயிருடன் போட்டு எரித்ததாக மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி வாயிலாக முறைப்பாடு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொடிகாமப் பொலிஸாரை பணித்திருந்த நிலையில், பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட நபருடைய வீட்டில் நாய்க்குட்டிகள் பிறந்திருக்கவில்லை எனவும் மூன்று பெரிய நாய்கள் மாத்திரமே வளர்க்கப்பட்டு வந்ததாகவும் அவை தற்போதும் பாதுகாப்பாக வீட்டில் நிற்பதாகவும் தெரிய வருகிறது.

மேற்படி முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழில் ஏழு நாய்க் குட்டிகளை எரித்த விவகாரம்; பொலிஸார் தீவிர விசாரணை samugammedia மிருசுவில் தவசிகுளம் பகுதியில் நபர் ஒருவர் ஏழு நாய்க்குட்டிகளை தீயிட்டு எரித்ததாக தொலைபேசி வாயிலாக மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் புதன்கிழமை (21) ஆரம்பித்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் பிறந்த ஒரு மாதம் கூட நிறைவடையாத ஏழு நாய்க்குட்டிகளை அவரது தூக்கத்திற்கு இடையூறு விளைவித்ததால் குப்பைக் கிடங்கிற்குள் உயிருடன் போட்டு எரித்ததாக மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி வாயிலாக முறைப்பாடு கிடைத்திருந்தது.இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொடிகாமப் பொலிஸாரை பணித்திருந்த நிலையில், பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட நபருடைய வீட்டில் நாய்க்குட்டிகள் பிறந்திருக்கவில்லை எனவும் மூன்று பெரிய நாய்கள் மாத்திரமே வளர்க்கப்பட்டு வந்ததாகவும் அவை தற்போதும் பாதுகாப்பாக வீட்டில் நிற்பதாகவும் தெரிய வருகிறது.மேற்படி முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement