• Nov 23 2024

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை!

Tharun / May 2nd 2024, 9:33 pm
image

கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக 

வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.


சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி  இடம்பெற்று இன்று (02) வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,


இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.


இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம். இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற யூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.


முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.குறித்த வழக்கானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி  இடம்பெற்று இன்று (02) வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம். இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற யூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement