திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றால் இன்று (12) தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம்சங்கர், நீதியரசர் இராமக்கமலன் ஆகியோர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்கள்.
குறித்த வழக்கானது விசாரணைக்காக இன்று (12) நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஆட்சேபனையின் அடிப்படையில் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
குறித்த வழக்கில் வழக்காளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார், ஜனாதிபதி சட்டத்தரணி சத்தார் மற்றும் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் ஆகியோரும் எதிராளிகள் சார்பில் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி. திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றால் இன்று (12) தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம்சங்கர், நீதியரசர் இராமக்கமலன் ஆகியோர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்கள்.குறித்த வழக்கானது விசாரணைக்காக இன்று (12) நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஆட்சேபனையின் அடிப்படையில் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.குறித்த வழக்கில் வழக்காளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார், ஜனாதிபதி சட்டத்தரணி சத்தார் மற்றும் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் ஆகியோரும் எதிராளிகள் சார்பில் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.