• Jul 06 2025

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வில்லை! குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

Chithra / Jul 6th 2025, 9:28 am
image


நமது நாட்டின் ஏற்றுமதித் துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் தருணத்தில், இந்த செயற்திறனற்ற அரசாங்கம் அமைதி காத்து வருகிறது. இந்த அரசாங்கத்தால் பதில்களையும் தீர்வுகளையும் வழங்க முடியாதுபோயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன. 

இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து முடிவெடுப்பவர்களுடன் ஏனைய நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி தமக்கு சாதகமான முறைகளில் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றனர். 

ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பானவர்கள், இத்தகைய இணக்கப்பாடுகளை இதுவரையில் எட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

பிரதிநிதிகளை அனுப்பி கலந்துரையாடல்களை நடத்தும் என இந்த அரசாங்கம் வீராப்பு பேசியது. ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. 

2028 ஆம் ஆண்டுக்குள் நமது வெளிநாட்டுக் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. 

ஏற்றுமதியில் பிரச்சினைகள் காணப்படுகின்ற படியால், ​​வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்ற விடயத்தில் சிக்கல்கள் நிலவுகின்றன. என தெரிவித்தார். 

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வில்லை குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் நமது நாட்டின் ஏற்றுமதித் துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் தருணத்தில், இந்த செயற்திறனற்ற அரசாங்கம் அமைதி காத்து வருகிறது. இந்த அரசாங்கத்தால் பதில்களையும் தீர்வுகளையும் வழங்க முடியாதுபோயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன. இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து முடிவெடுப்பவர்களுடன் ஏனைய நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி தமக்கு சாதகமான முறைகளில் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றனர். ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பானவர்கள், இத்தகைய இணக்கப்பாடுகளை இதுவரையில் எட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரதிநிதிகளை அனுப்பி கலந்துரையாடல்களை நடத்தும் என இந்த அரசாங்கம் வீராப்பு பேசியது. ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. 2028 ஆம் ஆண்டுக்குள் நமது வெளிநாட்டுக் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஏற்றுமதியில் பிரச்சினைகள் காணப்படுகின்ற படியால், ​​வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்ற விடயத்தில் சிக்கல்கள் நிலவுகின்றன. என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement